பொதுத்தேர்தலுக்கான வழிகாட்டல் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்- சுகாதார அமைச்சு

பொதுத்தேர்தலுக்கான வழிகாட்டல் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்- சுகாதார அமைச்சு

பொதுத்தேர்தலுக்கான வழிகாட்டல் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்- சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

22 May, 2020 | 2:50 pm

Colombo (News 1st) தற்போதைய சுகாதார நிலைமையின் கீழ், எதிர்வரும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வௌிப்பிரிவு மற்றும் தொழில்சார் சுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வாக்களித்தல், வாக்குகளை எண்ணுதல் , பிரசாரங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினூடாக இந்த அறிவுறுத்தல்களுக்கமைய தேர்தல் நடத்தப்படுமென சுகாதார அமைச்சின் வௌிப்பிரிவு மற்றும் தொழில்சார் சுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்