பாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2020 | 6:12 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

லாகூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்துள்ளது.

அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்