ஜப்பான் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

ஜப்பான் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

ஜப்பான் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2020 | 3:14 pm

Colombo (News 1st) தென் கொரியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் ஜப்பான், நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கான சான்றிதழ் இன்மையால் அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவிற்கான வௌிநாட்டு உதவிகள் மத்திய நிலையத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட ஆலோசகர் பிரேம்லால் அபேசிங்க குறிப்பிட்டார்.

26 பேர் நேற்று முன்தினம் (20) இரவு தென் கொரியா செல்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவர்களில் இருவரிடம் தென் கொரியாவிற்கு செல்வதற்கான தனிமைப்படுத்தல் சான்றிதழ் இருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல முடியாது என தென் கொரிய விமான சேவை அறிவித்துள்ளது.

இதேவேளை, இவர்கள் இருவரையும் ஜப்பானிலும் தொடர்ந்து தடுத்துவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணம் இன்மையால் இவர்கள் இருவரும் ஜப்பான் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாக சட்ட ஆலோசகர் பிரேம்லால் அபேசிங்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்