கொரோனா போராட்டத்தில் வெற்றியீட்டிய பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சர்

கொரோனா போராட்டத்தில் வெற்றியீட்டிய பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2020 | 9:28 pm

​Colombo (News 1st) கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகளைத் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளைத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு கொண்டு வருவோம். போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது தொடர்பிலேயே இருக்கின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் நாங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி கலந்துரையாடலில் ஈடுபட உள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டால் தான் நாங்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு கொண்டு செல்வோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்