சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் கவனம் தேவை

சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோருக்கு ஆலோசனை

by Staff Writer 21-05-2020 | 9:30 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். சிறுவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகம் என்பதால் எடை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் இலங்கை ஊட்டச்சத்து சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வேறெந்த செயற்பாடுகளிலும் ஈடுபடாது தொலைக்காட்சி மற்றும் கணினியுடன் சிறுவர்கள் நேரத்தை கழிப்பது குறித்தும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.