மண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் 

மண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் 

எழுத்தாளர் Staff Writer

21 May, 2020 | 8:11 pm

Colombo (News 1st) மண் சரிவு அபாயம் காரணமாக மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வட்டவளை – கிளார்மெண்ட தோட்டத்தின் 26 ஆம் இலக்க தொழிலாளர் குடியிருப்பின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியமை காரணமாக இடம்பெயர்ந்த செனன் தோட்டத்தை சேர்ந்த 21 பேர் தொடர்ந்தும் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொது சுகாதார பரிசோதகர்கள் செனன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சென்று சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்