ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாவை வழங்காதிருக்க தீர்மானம்

by Staff Writer 21-05-2020 | 11:48 AM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை கூறினார். நாட்டிலுள்ள தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்