கிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 21-05-2020 | 6:57 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பளை சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பலாலி விமானப் படையினருக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன் , அவருடன் பயணித்த அவரின் மனைவி காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் நாவற்குழியை சேர்ந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நாளை (22) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்