by Staff Writer 21-05-2020 | 7:05 AM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் தரித்துநிற்கும் வாகனங்களுக்கு இன்று (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டதை அடுத்து, மாநகர சபையின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 பிரிவுகளின் கீழ் கட்டணம் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை ஆணையாளரால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஸ்மார்ட் தரிப்பிட முகாமைத்துவ அமைப்பானது, காலி வீதி, டுப்ளிகேஷன் வீதி மற்றும் இந்த வீதிகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.