ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு

ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு

ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2020 | 8:43 am

Colombo (News 1st) அதிசக்திவாய்ந்த ஆம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தின் சொல்லமுடியாதளவு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு பர்கனாஸ் மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேனர்ஜி, அனைத்தையும் மீளமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

24 வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் சுமார் 5,500 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கொல்கத்தாவில் வீசிய பலத்த காற்றினால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 7 மணிக்கு புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பன் சூறாவளி இந்திய கடற்கரையை நோக்கி முன்னேறிய போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவைக் கடக்கும்போது புயல் மணிக்கு சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

1999 ஆம் ஆண்டின் பின்னர் வங்காள விரிகுடாவில் அதிசக்தி வாய்ந்த சூறாவளி வலுப்பெற்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆம்பன் சூறாவளி தற்போது வலுவிழந்திருந்தாலும், பலமிக்க சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஆம்பன் சூறாவளி பங்களாதேஷின் மேற்கு கரையில் இருந்து பூட்டான் நோக்கி நகரும் என கூறப்படுகின்றது.

சூறாவளியின் தாக்கம் காரணமாக 300 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்