அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

21 May, 2020 | 1:13 pm

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ளது.

தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் [email protected] மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்