60 M மக்கள் வறுமையை எதிர்கொள்ளும் சாத்தியம்

60 மில்லியன் மக்கள் வறுமையை எதிர்கொள்ளும் சாத்தியம் ; உலக வங்கி எச்சரிக்கை

by Staff Writer 20-05-2020 | 11:43 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றினால் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள நேரிடுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் 5 வீதம் குறைவடையுமென உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் (David Malpass) தெரிவித்துள்ளார். கொரோனாவினால் பல நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பல இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், 60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான வறுமையை எதிர்நோக்க நேரிடுமென உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் கூறியுள்ளார்.