மேற்கு வங்கத்தில் 4 இலட்சம் பேர் இடம்பெயர்வு

ஆம்பன் சூறாவளியால் மேற்கு வங்கத்தில் 4 இலட்சம் பேர் இடம்பெயர்வு

by Bella Dalima 20-05-2020 | 7:36 PM
Colombo (News 1st) ஆம்பன் சூறாவளி தற்போது வங்காள விரிகுடாவின் மேற்கு பகுதியூடாக இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளது. வங்காள விரிகுடாவில் கடந்த 199 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான சூறாவளியாக ஆம்பன் சூறாவளி கருதப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 அளவில் சூறாவளி இந்தியாவை ஊடறுத்துள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்கரையை நோக்கிப் பயணிக்கும் போது, ஒடிசா மற்றும் வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து சுமார் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பங்களாதேஷைத் தொடர்ந்து ஆம்பான் பூட்டானை ஊடறுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே சூறாவளி காரணமாக கொல்கத்தாவில் நாளை (21) மாலை வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.