வௌ்ளைப் புலியை  தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

வௌ்ளைப் புலியை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

வௌ்ளைப் புலியை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 May, 2020 | 2:55 pm

‘மரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் சிவகார்த்திகேயன், பின்னர் வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

திரையுலக நடிப்பைக் கடந்து உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளம் கொண்டவர்.

இந்தியாவின் சென்னை மாநகரத்திலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளைப்புலியின் 4 மாத பராமரிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வண்டலூர் பூங்காவில் அங்குள்ள விலங்குகளோடு ஒரு பந்தத்தை உருவாக்கும் வகையிலான ‘விலங்கு தத்தெடுப்பு’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தத் திட்டத்தின் கீழ், வௌ்ளைப் புலி ஒன்றை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் அனு என அழைக்கப்படுகின்ற குறித்த வௌ்ளைப்புலியை தொடர்ச்சியாக தத்தெடுத்து வருகின்றார் என வண்டலூர் பூங்காவின் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்