செவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்

செவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்

செவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2020 | 8:26 pm

Colombo (News 1st) செவனகல பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு,  எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17 முதல் 20 வயதிற்கு இடைப்பட்ட 6 பேரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்களில் குறித்த சிறுமியின் காதலனும் அடங்குகிறார்.

சிறுமியை பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்