அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 May, 2020 | 9:18 am

Colombo (News 1st) தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 வீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் M.H.N. சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கற்றல் முறைமையினூடாக கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்