பொதுத்தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

பொதுத்தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2020 | 7:57 pm

Colombo (News 1st) சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, பொதுத்தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

பொருளாதார, அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படாது தாமதமாகும் பொழுது பிரச்சினைகள் அதிகரிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற வகையில் பொதுத்தேர்தலுக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு போட்டியிட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறும் வகையில் வெற்றி பெறுவதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்