பொதுத்தேர்தலை ஆட்சேபித்து மனுத்தாக்கல்: நாளையும் பரிசீலனை

பொதுத்தேர்தலை ஆட்சேபித்து மனுத்தாக்கல்: நாளையும் பரிசீலனை

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 6:35 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (20) காலை 10 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட தரப்பினரால் அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடைமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்றும் இன்றும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்