by Staff Writer 19-05-2020 | 1:10 PM
Colombo (News 1st) அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.