சிலியில் உணவுத் தட்டுப்பாடு ; ஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸார் இடையே மோதல்

சிலியில் உணவுத் தட்டுப்பாடு ; ஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸார் இடையே மோதல்

சிலியில் உணவுத் தட்டுப்பாடு ; ஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸார் இடையே மோதல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 May, 2020 | 12:12 pm

Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான சிலியில் உணவுத்தட்டுப்பாடு தொடர்பான பதற்றங்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சிலி தலைநகர் சண்டியாகோவின் புறநகர் பகுதியில் இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக முடக்கல் அமுலிலுள்ள நிலையில், உணவுத்தட்டுப்பாடு தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தினாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

வீதிகளில் திரண்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் உணவு தேவைப்படுபவர்களுக்கு, போதியளவு வழங்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி செபஸ்ரியன் பினேரா (Sebastian Pinera) தொலைக்காட்சி உரையில் உறுதியளித்துள்ளார்.

சிலியில் 46,000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 478 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்