இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 9:17 am

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

மஹாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடுஆகிய மாநிலங்களில் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,000 இற்கும் அதிகமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையிலேயே, தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

சந்தைகள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை மீளத் திறப்பதற்கும் பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன.

எவ்வாறாயினும் பாடசாலைகள், கல்லூரிகள், திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்