அடைந்த சுதந்திரத்தை அர்த்தப்படுத்த ஒன்றுபட்டு எழ வேண்டும் – ஜனாதிபதி

அடைந்த சுதந்திரத்தை அர்த்தப்படுத்த ஒன்றுபட்டு எழ வேண்டும் – ஜனாதிபதி

அடைந்த சுதந்திரத்தை அர்த்தப்படுத்த ஒன்றுபட்டு எழ வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 8:08 am

Colombo (News 1st) தேசிய இராணுவ வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிக்கைகளை வௌியிட்டுள்ளனர்.

2009 மே மாதம் 19 ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது, படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடைந்துள்ள சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு, ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்