புதிய விளையாட்டரங்கு திட்டத்திற்கு மஹேல எதிர்ப்பு

புதிய கிரிக்கெட் விளையாட்டரங்கு அமைக்கும் அரசின் திட்டத்திற்கு மஹேல உள்ளிட்ட பலர் எதிர்ப்பு

by Staff Writer 18-05-2020 | 10:27 PM
Colombo (News 1st) கொழும்புக்கு அருகில் சர்வதேச தரத்திலான ஓர் கிரிக்கட் மைதானத்தின் தேவை உணரப்பட்டதாலேயே, ஹோமாகம தியகமையில் கிரிக்கட் மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு 26 ஏக்கர் பரப்பிலான நிலமொன்று ஹோமாகம பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோமாகம தியகமையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கட் மைதானமானது தமது முழுமையான செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. ஹோமாகம தியகமையில் நிர்மாணிக்கப்படவுள்ள மைதானம் தொடர்பில் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் மைதானங்களில் குறிப்பிடத்தக்களவு சர்வதேச போட்டிகளோ, உள்ளூர் போட்டிகளோ நடைபெறாத நிலையில் மேலும் ஒரு சர்வதேச மைதானம் எமக்கு தேவையா?'' என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு தற்போதுள்ள பிரச்சினை என்ன? நாளை என்ன சாப்பிடுவது என்பதே நாட்டு மக்களுக்குள்ள பிரச்சினை. உண்மையான பிரச்சினையை மறைப்பதற்காவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. அரசாங்கம் தற்போது ஜனாதிபதிக்காக ஜனாதிபதியின் செயலாளரின் ஒரு நாள் சம்பளத்தை பிச்சை எடுக்கின்றனர். வேறு வழியில்லை என கூறுகின்றார்கள். எனவே அரசாங்கம் புத்தியுடன் தற்போது செயற்பட வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் அதனையே நிரூபிக்கின்றது என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பணம் இருந்தால் அனைத்து தொகுதிகளிலும் மைதானம் அமைப்பதில் எமக்கு பிரச்சினை இல்லை. கடந்த முறையும் அரசாங்கத்தில் இருக்கும்போது, பல கோடி ரூபா செலவுசெய்து ஹம்பாந்தோட்டையில் மைதானம் ஒன்றை அமைத்தனர். எனினும் அதில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதா இல்லையா என்பது, இந்த நாட்டு மக்களுத் தெரியும். இன்று விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் விசம் அருந்தப்போதாக தொலைக்காட்சிகளுக்கு முன்பாக வந்து கூறும் போது மைதானம் அமைப்பது தற்போது முக்கியமானதா என, பந்துல குணவர்தன, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸவிடம் நாம் கேட்கின்றோம். இந்த 40 மில்லியன் டொலரை விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்துங்கள் என அரசாங்கத்திடம் கோருகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார். Covid நிதியத்தில் உள்ள பணத்தை விட 4 மடங்கு அதிகமான பணத்தை செலவுசெய்து, அதாவது 700 அல்லது 750 பில்லியனை செலவுசெய்து இலங்கையின் மிகப் பெரிய மைதானத்தை ஹோமாகவில் அமைக்கப் போவதாக கூறுகின்றனர். இவ்வாறான முட்டாள்தனமாக பந்துல குணவர்தனை பேசுவதை எம்மால் நம்ப முடியால் உள்ளது. எனினும் ஜனாதிபதி இவ்வாறான முட்டாள் தனமான விடயங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டார் என நம்புகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹிரன்ஸா ஹேரத் கூறியுள்ளார்.