படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு 

by Chandrasekaram Chandravadani 18-05-2020 | 5:54 PM
Colombo (News 1st) களுத்துறை, மக்கொன துறைமுகத்தில் கடலுக்குச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் மூவர் நீரில் மூழ்கியுள்ளதுடன் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட மீனவர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மக்கொன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேநேரம், காலநிலை சீற்றத்திற்கு முன்னர் கடலுக்குச் சென்ற 9 படகுகள் இன்று வெலிகம பிரதான ரேடியோ மத்தியநிலையத்தினை தொடர்புகொண்டனர். குறித்த பகுதியில் நிலைகொண்ட சூறாவளியில் இருந்து தாம் தப்பியுள்ளதாக இதன்போது மீனவர்கள் தெரிவித்தனர். தெவிநுவர, கோட்டேகொட மற்றும் வென்னப்புவ பிரதேசங்களைச சேர்ந்த மீனவர்களே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் தொடர்ந்தும் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, அநுராதபுரம் கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்து நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.