சன நெரிசலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் புதிய நடைமுறை

சன நெரிசலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் புதிய நடைமுறை

சன நெரிசலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் புதிய நடைமுறை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 May, 2020 | 3:27 pm

Colombo (News 1st) பிரித்தானியாவில் பொதுப் போக்குவரத்தில் சனநெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேலைகளுக்குச் சமூகமளிப்பதற்காக, மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தக்கூடுமென்ற அச்சத்தின் காரணமாக ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனநெரிசல் முகாமைத்துவப் பயிற்சியளிக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் சில ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மற்றும் ரயில் மேடைகளில் அதிகளவு பயணிகள் இருந்தால், புதிதாக எவரையும் உள்நுழைய அனுமதிக்காதிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்றைய தினத்திலிருந்து, மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்