அமெரிக்க படையினரால் புதிய ரொக்கெட் ஏவப்பட்டது

அமெரிக்க படையினரால் புதிய ரொக்கெட் ஏவப்பட்டது

அமெரிக்க படையினரால் புதிய ரொக்கெட் ஏவப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

18 May, 2020 | 3:31 pm

Colombo (News 1st) இரகசியத் திட்டம் ஒன்றுக்காக X-37B விண்வௌி ஓடமொன்றைத் தாங்கிச் செல்லும் Atlas V ரொக்கெட், அமெரிக்க விமானப்படையால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

கேப் கனவரெலிலிருந்து நேற்றைய தினம் இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ரொக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த போதிலும், சீரற்ற வானிலையால் அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பாதை சோதனை வாகனம் எனவும் அழைக்கப்படும் இந்த விண்வௌி ஓடம், செய்மதியொன்றை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதோடு, சக்தி வீச் தொழில்நுட்பத்தையும் பரிசோதிக்கவுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த விண்வௌி ஓடத்தின் 6 ஆவது திட்டம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்