by Staff Writer 17-05-2020 | 5:38 PM
Colombo (News 1st) வவுனியா - பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 31 பேர் இன்று (17) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 2 வாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், Covid - 19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 31 பேர் இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி, கண்டி, மொனராகலை, செவனகல ஆகிய இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.