Colombo (News 1st) இம்முறை உயர்தர பரீட்சையின் நான்கு பரீட்சைகளில் நிரற்படுத்தப்படாத கணிப்பாண் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பொறியியல் தொழிநுட்பவியல், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பரீட்சைகளில் நிரற்படுத்தப்படாத கணிப்பாண் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வித்துறையில் நிலவும் சில சிக்கல்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
பாடசாலைக் கல்வி குறித்து அவதானம் செலுத்துகையில் கொழுப்பை எடுத்துக்கொண்டால் இணையத்தள பாவனைக்குத் தேவையான கருவிகளுக்கு தட்டுப்பாடுள்ளது. 60 வீதத்திற்கும் குறைந்தளவே அந்த வசதியுள்ளது. முக்கிய பாடசாலைகளின் அதிபர்களின் கருத்துக்களுக்கு அமைய வசதிகள் இன்மையால் இணையக்கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். இணையத்தள கல்வி வேண்டாம் என்பதற்காக நாம் இவற்றைக் கூறவில்லை. எனினும், இணையதள கல்வியை பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டுவிட்டது என்ற நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டாம். இதனை எமது கல்வி அதிகாரிகளுக்கு நாம் கூறுகின்றோம். பல்கலைக்கழக மாணவர்களில் 60 வீதமானவர்களிடம் மாத்திரமே, வசதிகள், உபகரணங்கள் காணப்படுகின்றன. 30 வீதமானவர்களுக்கு மாத்திரமே, Data செலவை சமாளிக்கும் இயலுமை உள்ளது. மார்ச் 11ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டன. மீண்டும் பாடசாலைகளைத் திறக்க முடியுமாயின், மூடப்பட்ட காலப்பகுதிக்கும் சேர்த்து பரீட்சை நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு நாம் கல்வி அமைச்சிடம் கோருகின்றோம்
என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.