பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட 31 பேர் வீடு திரும்பினர்

பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட 31 பேர் வீடு திரும்பினர்

பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட 31 பேர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2020 | 5:38 pm

Colombo (News 1st) வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 31 பேர் இன்று (17) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 2 வாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், Covid – 19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 31 பேர் இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி, கண்டி, மொனராகலை, செவனகல ஆகிய இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்