சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 May, 2020 | 4:32 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு சட்டவிரோதமாக மாடுகளைக் கொண்டுசென்ற ஒருவர் கலாஓயா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனரக வாகனம் ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில், இவர் மாடுகளை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்திலிருந்து 24 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கனரக வாகனத்தின் சாரதியிடம் கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கனரக வாகனத்தின் சாரதி இன்று (17) தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்