ஒரு நாள் சம்பள அர்ப்பணிப்பு முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல – பாதுகாப்பு செயலாளர்

ஒரு நாள் சம்பள அர்ப்பணிப்பு முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல – பாதுகாப்பு செயலாளர்

ஒரு நாள் சம்பள அர்ப்பணிப்பு முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல – பாதுகாப்பு செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2020 | 6:06 pm

Colombo (News 1st) ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையது அல்லவென பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை நிவர்த்திசெய்யும் வகையில் மே மாத சம்பளம் அல்லது ஒரு நாளுக்கான சம்பளத்தை விதவைகள் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயம் சுற்றுநிரூபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்குள் முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்வாங்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்