45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

by Staff Writer 16-05-2020 | 3:16 PM
Colombo (News 1st) பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். காலி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வீழ்ந்துள்ள மின்சார கம்பிகளை மீள இணைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த பணிகளை துரிதப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.