வியட்நாம் கொரோனாவை உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தியது எவ்வாறு?

வியட்நாம் கொரோனாவை உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தியது எவ்வாறு?

வியட்நாம் கொரோனாவை உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தியது எவ்வாறு?

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2020 | 9:21 pm

Colombo (News 1st) பெரும்பாலான நாடுகளில் கோரத்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாமில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை .

வியட்நாமில் 97 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு 300 பேர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

வியட்நாமின் Ho Chi Minh நகரில் வசித்து வரும் தமது மகனைப் பார்ப்பதற்கு சீனாவின் வுஹானிலிருந்து சென்றிருந்த ஒருவருக்கே முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அன்றிலிருந்து பயணத்தடை விதிக்கப்பட்டு, சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சீன எல்லைப்பகுதி மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

சீனாவிலிருந்து வியட்நாம் செல்ல முற்றாகத் தடை விதிக்கப்பட்டதுடன் , விமான மற்றும் கப்பல் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இதனாலேயே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ள வல்லுநர்கள், இவ்வாறான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க மற்றைய நாடுகளுக்கு சில மாதங்களானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்