உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 May, 2020 | 3:43 pm

Colombo (News 1st) இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அவ்ரயா எனும் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஊரடங்குசட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தத்தமது சொந்த இடங்களுக்கு நடைபயணமாக திரும்புகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரத்திலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 13-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்