5,000 ரூபா முறைகேடுகள் தொடர்பில் விசாரணை

5,000 ரூபா வழங்கலில் முறைகேடுகள்; கணக்காய்வு திணைக்களத்தால் விசாரணை

by Staff Writer 15-05-2020 | 3:30 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காக வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். www.auditorgeneral.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிடைக்கும் முறைப்பாடுகளை மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன மேலும் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்