by Staff Writer 15-05-2020 | 4:36 PM
Colombo (News 1st) மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பரப்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கமே இதற்கு காரணமாகும்.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.