பண்டாரநாயக்க மாவத்தை, சுதுவெல்ல பகுதிகள் திறப்பு

பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறப்பு

by Staff Writer 15-05-2020 | 2:59 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல ஆகிய பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு -12 பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள சிலர் சுய தனிமையில் ஈடுபட்டுள்ளதாவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். சுகாதார தரப்பினரின் ஆலோசனை கிடைக்கும் வரை சுய தனிமை செயற்பாட்டை தொடர்ந்தும் பேணுமாறு இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டிலிருந்து Covid - 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடரந்தும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் 34 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் செயற்படுகின்றன. இந்த நிலையங்களில் 2,994 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவ தளபதி லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கிளிநொச்சி- முழங்காவில் உள்ள 651 படைப்பிரிவின் இராணுவ பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 பேரே இன்று (15) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளர். இவர்களில் 22 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தை, வெல்லம்பிட்டிய, வாழைத்தோட்டம், பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இராணுவ பஸ்கள் மூலம் இவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.