மெக்ஸிக்கோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு

மெக்ஸிக்கோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு

மெக்ஸிக்கோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 May, 2020 | 4:19 pm

Colombo (News 1st) மெக்ஸிக்கோவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் பதிவாகும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பினையடுத்து இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2,409 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் மெக்ஸிக்கோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,000 ஐ கடந்துள்ளது.

நாட்டில் அமுலிலுள்ள முடக்கலைத் தளர்த்தி, வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்