உலக பொருளாதாரத்தில தாக்கம் செலுத்திய கொரோனா

உலக பொருளாதாரத்தில தாக்கம் செலுத்திய கொரோனா

உலக பொருளாதாரத்தில தாக்கம் செலுத்திய கொரோனா

மூலம் அறிக்கை 3cs எழுத்தாளர் Staff Writer

15 May, 2020 | 3:49 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் (Trillion) டொலர் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த மாதம் எதிர்வுகூறப்பட்டதுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ள நிலையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் 5.8 Trillion டொலர் தொடக்கம் 8.8 Trillion டொலர் வரையிலான பாதிப்புகள் இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடுமென குறித்த வங்கி அறிவித்துள்ளது.

குறித்த எண்ணிக்கை 6.4 வீதம் தொடக்கம் 9.7 வீதம் வரையான உலகப் பொருளாதார வௌியீட்டைச் சமப்படுத்தியுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக, சர்வதேச அளவில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்