by Staff Writer 14-05-2020 | 3:28 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் இந்த குழாத்தில் அடங்குகின்றனர்.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.