இங்கிலாந்து கழிவுப் பொருட்களை திருப்பியனுப்ப நடவடிக்கை

இங்கிலாந்து கழிவுப் பொருட்களை திருப்பியனுப்ப நடவடிக்கை

இங்கிலாந்து கழிவுப் பொருட்களை திருப்பியனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 May, 2020 | 10:05 pm

Colombo (News 1st) கடந்த வருடத்தில் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குப்பைகளை மீள ஏற்றுமதி செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த குப்பைகள் இலங்கை துறைமுக வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு குப்பைகளை கொண்டுவந்த விவகாரம் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனமொன்று முன்னெடுத்த நீதிமன்ற நடவடிக்கைக்கு ஏற்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பிற்கிணங்க இந்த குப்பைகளை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சூழலியல் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களுடன் இராஜதந்திர ரீதியில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்