by Staff Writer 13-05-2020 | 6:55 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட பிணை, மேல் நீதிமன்றத்தால் இன்று (13) இரத்துச் செய்யப்பட்டதை அடுத்தே அவர் கைதானார்.
மேல் நீதிமன்ற உத்தரவின் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை அழைத்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமமாறு உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவை அடுத்து இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்று பத்தரமுல்லையிலுள்ள ராஜித சேனாரத்னவின் வீட்டுக்கு சென்றபோதிலும் அவர் அங்கு இருக்கவில்லை.
இதனிடையே, பேருவளையிலிருந்து வருகைதந்த அவர் சட்டத்தரணிகளுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று சரணைடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.