நீர் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த சந்தர்ப்பம்

நீர் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்

by Staff Writer 13-05-2020 | 4:17 PM
Colombo (News 1st) நீர்ப்பட்டியலுக்கான கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு நீர்வழங்கல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பில் மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார். எனவே, மக்களின் கோரிக்கைக்கு அமைய நீர்க்கட்டணங்கள் மீள்பரிசீலனை செய்யப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.