தமிழ் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு

by Staff Writer 13-05-2020 | 2:59 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நேற்று மாலை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் M.A. சுமந்திரன், முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணத்தின் பங்களிப்புடன் உறுதிசெய்யப்பட்ட முழுமையான அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளார். வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது உறுதியளித்துள்ளார்.