டயகமவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

டயகமவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

டயகமவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 May, 2020 | 6:04 pm

Colombo (News 1st) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மேற்கு இரண்டாம் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தமது வீட்டுக்கருகிலுள்ள தேயிலைமலையில் விறகு சேகரிப்பதற்காக இன்று பகல் சென்றபோது குளவிக்கொட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

69 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

தமக்கான வீதிப் போக்குவரத்து வசதியின்மை மற்றும் தோட்ட நிர்வாகத்தினரின் கவனயீனத்தின் காரணமாக உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்