கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

12 May, 2020 | 2:43 pm

Colombo (News 1st) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL 20 சுட்டெண் 5 வீதத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்தமையினால் இன்று (12) காலை பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளாந்த புரள்வு 3 பில்லியனை விட அதிகரித்திருந்த நிலையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

இன்று மதியம் 12 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த புரள்வு 3364.3 மில்லியனாக பதிவாகியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்