பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி

பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி அரேபியா

by Chandrasekaram Chandravadani 11-05-2020 | 6:26 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் இரத்துச் செய்தும் சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே குறைபெறுமதியிலிருந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.