by Staff Writer 10-05-2020 | 8:26 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதிலும், அது முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமையை படிப்படியாக வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையே நாளைய தினம் ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன் சமூக இடைவௌி பேணப்பட வேண்டும் எனவும் நாட்டை வழமைக்கு கொண்டுவர அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் முன்னரை விடவும் கவனமாக செயற்பட வேண்டியது அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
Covid - 19 வைரஸ் தொற்றினால் இங்கிலாந்தில் இலங்கையர்கள் 25 பேர் உயிரிழந்த போதிலும், நாட்டில் இதுவரையில் 9 பேர் மாத்திரமே உயிரிழந்தமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் பிரதமர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.