கப்பித்தாவத்தை விநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவபதமடைந்தார்

by Staff Writer 10-05-2020 | 9:28 PM
Colombo (News 1st) கொழும்பு கப்பித்தாவத்தை ஶ்ரீ பாலசெல்வ விநாயகமூர்த்தி ஆலய பிரதம சிவாச்சாரியார் சண்முகரட்ண ஷர்மா இராதாகிருஷ்ண குருக்கள் சிவபதமடைந்தார். தனது 62 ஆவது வயதில் அவர் நேற்றிரவு (09) காலமானமாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர். கப்பித்தாவத்தையில் பிறந்த அவர், 19 வயது முதல் குருத்துவ பணிகளில் ஈடுபட்டார். அன்னார் கொழும்பு விவேகானந்தா கல்லூரி மற்றும் இசிப்பத்தனை கல்லூரியின் பழைய மாணவராவார்.