சர்வதேச அன்னையர் தினம் இன்று

சர்வதேச அன்னையர் தினம் இன்று

சர்வதேச அன்னையர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

10 May, 2020 | 3:59 pm

Colombo (News 1st) சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்.

ஒவ்வொரு வருடத்திலும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

16 ஆம் நூற்றாண்டில் மேற்கு வேர்ஜினியாவில் அன்னையை போற்றும் வகையிலும் தனது தாயின் விருப்பத்திற்கேற்பவும் பிரபல சமூக சேவகியான அனா ஜார்விஸ்சினால் கிராப்டன் நகரில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.

இதன் பிரகாரம் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு மதரிங் சன்டே (mothering sunday) என அழைக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் நாலாபக்கமும் சிதறிப்போயிருந்தன

பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேரவும் அவர்களுடைய நல்வாழ்க்கை மற்றும் சமாதானத்துக்கு அயராது பாடுபட்ட ஜார்விஸை கௌரவிக்கும் நோக்கிலும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் வருடாந்தம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுஸ்டிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை விடுத்தார்.

இதனை உலகிலுள்ள 46 நாடுகள் அந்த காலப்பகுதியில் ஏற்றுக்கொண்டு கொண்டாட ஆரம்பித்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்